நோணாங்குப்பத்தில் அரசு சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் படகு குழாம் நுழைவு வாயிலில் இருந்த பெயர் பலகை சில நாட்களுக்கு முன் கீழே விழுந்து கிடந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அந்த பெயர் பலகையை சுற்றுலாத்துறை அதிகாரிகள் ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு நன்றிகள் பல.