மேல்கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சில்வர் கிளவுட் ஆற்று வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுகிறது. சில சமயங்களில் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது. மேலும் நீரோட்டம் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, அங்கு சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.