கூடலூரில் இருந்து கல்பெட்டா உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படும் போது தானியங்கி கதவுகள் பூட்டாமல் உள்ளது. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் கடும் குளிரால் பயணிகள் அவதி அடைகின்றனர். இதேபோல் கோழிக்கோடு, கண்ணனூர் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கதவுகள் பூட்டுவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
முகமது, கல்பெட்டா
முகமது, கல்பெட்டா