
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து செல்லும் அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள் சரியாக இயங்குவதில்லை. சில பஸ்களில் கயிறு மூலம் தானியங்கி கதவுகளை கட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற பஸ்களில் பயணிக்க பொதுமக்கள் அச்சம் மற்றும் அவதி அடைந்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே அரசு சொகுசு பஸ்களில் முறையாக தானியங்கி கதவுகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.