தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்

Update: 2022-10-23 10:32 GMT
கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை இடது பக்கம் நடைபாதை உள்ளது. இதன் கரையோரம் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள், பெண்கள் சாலையில் நடந்து செல்லாத வகையில் தடுப்புகள் இருந்தது. இந்த நிலையில் இரும்பு தடுப்பு கம்பிகள் பெரும்பாலான இடங்களில் மாயமாகிவிட்டது. சில இடங்களில் பெயரளவுக்கு மட்டுமே நிற்கிறது, எந்த நேரத்திலும் சரிந்து விடும் நிலையில் உள்ளது. இதை தடுக்க நடைபாதை கரையோரம் தடுப்பு கம்பிகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமர், கூடலூர்,

மேலும் செய்திகள்