திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 7-வது வார்டு திருவள்ளூர் நகரில் பெண்களுக்கான கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. தற்போது இந்த கழிப்பறை கட்டிடம் புதர்மண்டி காட்சியளிப்பதோடு, சேதமடைந்தும் வருகிறது. இதனால் அப்பகுதி பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.