திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து கடலூர், திருச்சி, சென்னை, சேலம், பெங்களூர், அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், பழனி, கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பஸ்கள் எந்தநேரத்தில் புறப்படும் என்பது குறித்த கால அட்டவனை இல்லை. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க திட்டக்குடி பஸ் நிலையத்திற்கு கால் அட்டவணை அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பாா்ப்பாகும்.
