அய்யன்கொல்லியில் கூட்டுறவு வங்கி அருேக பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடம் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அங்கு செல்லவே பொதுமக்கள் தயங்குகின்றனர். எனவே சுகாதாரத்தை பேணும் வகையில் அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.