பந்தலூர் அருகே உள்ள அம்பலமூலா பஜாரில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்க்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை துரத்து சென்று அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் மாணவர்கள் கிழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்க்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.