விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் செல்லும் சாலை அருகே திட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து எற்படும் முன் விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.