உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்தாண்டவர் கோவில் காலனி பகுதியில் இரவு நேரங்களில் மதுபிரியர்கள், மதுகுடித்து விட்டு போதை தலைக்கு ஏறியதும் ஆபாசமாக பேசுவது, தகராறு செய்வது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தெருவில் நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே உளுந்தாண்டவர் கோவல் காலனி பகுதியில் இரவு நேரங்களில் தினமும் போலீசார் ரோந்து செல்வது அவசியம்.