சேலம் ஓமலூர் மெயின் ரோடு இரும்பாலை பிரிவு ரோடு அருகே மேம்பாலத்தில் உயர் கோபுர மின்விளக்கு பகலிலும் எரிகிறது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இரவில் மட்டும் எரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.