தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்கு முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?