பந்தலூர் அருகே அய்யன்கொல்லி சமுதாய கூடம் அருகே பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம், கட்டி முடித்த நாள் முதல் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகலாம். எனவே அந்த கழிப்பிடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.