பந்தலூர் பஜார் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவை சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக அவ்வப்போது உலா வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. சில நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை முட்டி தள்ளுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.