மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் கடுவங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளன. மேலும், அலுவலக கட்டிடத்தில் ஒரு பகுதியில் நூலகமும் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் மழைக்காலங்களில் அலுவலக கட்டிடத்துக்குள் மழைநீர் கசிவசால் நூல்கள், அலுவலக கோப்புகள் நனைந்துவிடுகின்றன. அதுமட்டுமின்றி கட்டிடம் வலுவிழுந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?