தெருநாய்களால் தொல்லை

Update: 2022-07-14 18:18 GMT

கரூர் ராயனூர் பகுதியில் உள்ள வசந்தம் நகர், கே.கே.நகர், சூர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெரு நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்