தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிப்பதாக பிரகாசபுரத்தை சேர்ந்த வாசகர் ஜேசு கோபின் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக பழைய மின்கம்பம் மாற்றப்பட்டு, புதிய மின்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.