பயணிகள் நிழற்கூடத்தின் நிலை

Update: 2022-09-27 17:10 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து காந்திபுரம், ராமநாதபுரம் புதூர் வழியாக கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் சாலையில் வெண்டாங்கி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தில் வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூடத்தை வேறு உபயோகத்திற்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, வெண்டாங்கி, நாமக்கல்.

மேலும் செய்திகள்