மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் திரிகின்றன. மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் நாய்கள் மீது மோதி அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சியினர் சாலைகளில் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.