ஆவின் பால் தட்டுப்பாடு

Update: 2026-10-04 14:16 GMT

புதுக்கோட்டை கல்யாணபுரம் பகுதியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து மாவட்டம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் மற்றும் சிறிய தேநீர் நிலையத்தினர் அதிக விலை கொடுத்து தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கி, வழக்கம்போல் தடையின்றி பால் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்