கூடலூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சாலையோரம் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை காண முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன விபத்துகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோர முட்புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.