நிழற்குடையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

Update: 2022-09-25 15:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள பஸ்நிறுத்தங்களில் பொதுமக்களின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. நிழலுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையில் சிலர் சினிமா படத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டி விடுகின்றனர். இதனால் நிழற்குடையில் உள்ள சுவர்கள் மிகவும் அறுவருக்கத்த வகையில் உள்ளது. மேலும் நிழற்குடை உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்