முட்புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-09-24 17:56 GMT
  • whatsapp icon
திட்டக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லுகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை அருகே காலிமனையில் ஏராளமான முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஐந்துக்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வருகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே முட்புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்