மயிலாடுதுறை அருகே உள்ள புலவனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். கால்நடைகள் அவ்வபோது தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இவற்றுக்கு சிகிச்சை அளிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புலவனூர் பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?