ஏரிகளில் மீன்கள் செத்து மிதப்பது தடுக்கப்படுமா?

Update: 2022-09-23 14:07 GMT

பெங்களூரு நகரில் ஏரிகள் அதிகமாக உள்ளது. சமீபகாலமாக ஏரிகள் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதற்கு ஏரியில் கழிவுநீர் கலப்பதே காரணம். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரிகளில் கலந்து விடுகின்றன. அந்த கழிவுநீரால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

ஏரிகளில் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. மீன்கள் செத்து மிதப்பதை தடுக்க இனியாவது கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்