மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி இவை சாலையில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், சிறுவர், சிறுமிகளை முட்டிவிடுகின்றன. இதனால் சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?