விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்

Update: 2022-09-23 13:11 GMT
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்காத நிலையில் இளைஞர்கள் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான விளையாட்டு மைதானம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் கூடலூர் உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெண்ணிலா, கூடலூர்.

மேலும் செய்திகள்