கூடலூரில் இருந்து 1-ம் மைல் பாலம் வரை சாலையோரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான இடங்களில் மண் நிறைந்து அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் சாலையின் மறுபுறம் பள்ளத்தாக்கான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் மழைநீர் வடிகாலில் உள்ள மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்லஸ், கூடலூர்