கூடுதல் பணிமனை அமைக்கப்படுமா?
ஊட்டி, கூடலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் ஏராளமான பயணிகள் சென்று, ஊட்டி, கூடலூரில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறார்கள். ஆனால் ஊட்டி, கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பணிமனைகள் (டெப்போ) போதுமானதாக இல்லை. இதனால் பஸ்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?