குலசேகரன்பட்டினம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகிறது. குழந்தைகள் மற்றும் பக்தர்களை மாடுகள் முட்ட வருகிறது. அவற்றை விரட்டினால் கொம்பை அசைத்து பயமுறுத்தி முட்டுகிறது. பஜார், கடைகளுக்கு வரும் பொதுமக்களையும் முட்டுகிறது. எனவே பஜார், கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.