மரக்கிளையை அகற்ற கோரிக்கை

Update: 2022-09-18 13:34 GMT
கூடலூர் புஷ்பகிரி பகுதியில் கடந்த மாதம் அபாயகரமான மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டது. தொடர்ந்து கிளைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு மரத்தின் கிளை அகற்றப்படாமல் உள்ளது. தற்சமயம் அந்தக் கிளை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர, கனரக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மேல் விழுவதற்கும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மர கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவசங்கர், தேவர் சோலை.

மேலும் செய்திகள்