அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கடிக்கு மருந்து இல்லை

Update: 2022-09-17 13:36 GMT

அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கடிக்கு மருந்து இல்லை

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுவாயை சேர்ந்த 8 வயது சிறுமியை நாய் கடித்து விட்டது. உடனே கொடுவாய் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் டி.டி.தடுப்பூசி போடப்பட்டது.பின்னர் திருப்பூர் தாராபுரம் ே்ராட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.ஆனால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சென்று கேட்டபோது நாய்க்கடிக்கு ஊசி மருந்து இல்லை என்று கூறி போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேரில் சென்று கேட்டபோதும் மருந்து இன்னும் வரவில்லை என்று கூறினார்கள். இதனால் நாங்கள் இன்னும் நாய்க்கடிக்கு ஊசி போடவில்லை.சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்க்கடிக்கு ஊசி போட நடவடிக்கை எடுப்பார்களா?

செல்வமணி,கொடுவாய்.

96778 00577

மேலும் செய்திகள்