சென்னை திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியில் உள்ள 2-வது மற்றும் 4-வது தெருவில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. மேலும் தெருக்களில் நடந்து செல்லும் சிறுவர்களை குறைப்பது, மோட்டார் சைக்கிள்களை கும்பலாக துரத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் சிறுவர் முதல் முதியோர் வரை அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்.