புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காய்ச்சல் நோய் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பெரும் அவதிபட்டு வருகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் என தொற்றுநோய் போல் பரவுகிறது. கறம்பக்குடியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் இல்லை.இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி பகுதியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களை நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.