தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-12 17:07 GMT

சேலம் மாநகரில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பெரமனூர், கோவிந்தகவுண்டர் தோட்டம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அப்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்துகின்றன. அப்போது அவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தெருநாய்களை பிடிப்பதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்