சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-12 17:45 GMT

  தர்மபுரி மாவட்டத்தின் எல்லையில் பெரியப்பட்டி ஊராட்சியில் 9 கிராமங்கள் உள்ளன. இங்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. இந்த பகுதி மக்கள் 10 கி.மீ. தொலைவில் உள்ள நரிபள்ளி கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட எல்லையில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்