செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள விளையாட்டு மைதானங்களில் சுற்றி திரியும் நாய்கள் உடற்பயிற்சி செய்ய வருபவர்களை துரத்தி கடிக்க வருகிறது. குடியிருப்புவாசிகள் சாலையோரங்களில் இட்டு செல்லும் உணவை சாப்பிட்டாலும், பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதையை தெருநாய்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.