பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

Update: 2022-09-12 12:09 GMT

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் பளுவஞ்சி கிழக்கு கவுண்டம்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே பயின்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

மயான வசதி