சந்து கடைகளால் திருட்டு சம்பவங்கள்

Update: 2022-09-11 16:03 GMT

,சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தேக்கம்பட்டி ஊராட்சி தே.கொல்லப்பட்டி அருந்ததியர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக சந்து கடைகள் செயல்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் முகம் தெரியாத வெளிநபர்கள் வருவதால் எங்கள் ஊர்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே போலீசார் மதுபான சந்துக்கடையை வைத்திருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்