உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பாழடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்த நிலையில் இருந்தது. இதனால் அப்போது மக்கள் பெரும் அச்சமடைந்து காணப்பட்டனர். இது குறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதை அடுத்து அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.