கூடலூர் செம்பாலா பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டிடம் உள்ளது. இதில் பயணிகள் நிற்க முடியாத வகையில் குப்பை கழிவுகள் கிடக்கிறது. மேலும் நிழற்குடை கட்டிடத்தின் பின்புறம் புதர்கள் வளர்ந்துள்ளதால் பெண்கள், மாணவிகள் அச்சமடைந்து நிழற்குடை கட்டிடத்தை பயன்படுத்த முன் வருவதில்லை. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை சுகாதாரமாக பேணுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
ராஜ், கூடலூர்.