மோட்டார் சைக்கிள்களில் மாணவர்கள் சாகசம்

Update: 2022-09-10 11:28 GMT
கூடலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் மாணவர்கள் இளைஞர்கள் சாகசம் செய்யும் வகையில் இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுவது, விதிமுறைகளை மீறி அதி வேகமாக இயக்குவது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், கூடலூர்.

மேலும் செய்திகள்