திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஆமூர் ஊராட்சிக்குட்பட்ட துலங்கம்பட்டு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக இடித்து அப்புறப்படுத்துவதோடு, புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.