மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தற்பொழுது குறுவை நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக சீர்காழி பகுதியில் விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளன. மேலும் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.