சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஆண்டிப்பட்டியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ரேஷன்கடை அமைத்து தர கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு வசிப்பவர்கள் அருகே உள்ள ஊர்களுக்கு சென்று ரேஷன்கடைகளில் பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. அவ்வாறு செல்வதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் உடனே ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
-மணி, சேலம்.