விழும் நிலையில் சுகாதார நிலைய கட்டிடம்

Update: 2022-09-08 14:42 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே இருமேல்பட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இதன் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. மேலும் மழைக்காலங்களில் சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் ஒழுகுகிறது. எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் சுகாதார நிலையம் உள்ளதால் சிகிச்சைக்காக இங்கு வரும் நோயாளிகள் பெரும் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்