ஊட்டி, கூடலூர், குன்னூரில் இருந்து கோவை, திருப்பூர், சேலம் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் ஓட்டல்களில் நிறுத்தப்படுகிறது. அங்கு அரை மணி நேரம் பஸ் நிற்பதாலும், அங்கு கழிப்பிட வசதிகள் இல்லாததாலும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அரசு பஸ்களை மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.