மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு அருகில் உள்ள இளநீர் கடையில் பக்தர்கள் இளநீர் குடித்துவிட்டு இளநீர் கூடுகள் அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் இளநீர் கூடுகளாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் இளநீர் கூடுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. ஒரு சில இளநீர் கூடுகள் அழுகி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இளநீர் கூடுகளை அப்புறப்படுத்துவதற்கும், இளநீர் கூடுகளை போடுவதற்கு குப்பை தொட்டி வைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.