வீடுகளுக்குள் படையெடுக்கும் விஷப்பூச்சிகள்

Update: 2022-09-08 11:45 GMT

வீடுகளுக்குள் படையெடுக்கும் விஷப்பூச்சிகள்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் எஸ்.எம்.ஏ.நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளை நாணல் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. இதன்காரணமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்